தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக அருள்மிகு மினாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பற்றி ஒரு இணையதளம் உருவாகி உள்ளது!
இத்தளத்தில் இருக்கும் படங்கள் சாதரணமாக உலக அதிசயங்கள், சினிமா ஒளிப்பதிவுகளில் மட்டுமே நாம் பாத்திருக்கக்ககூடும், அதே போன்ற படங்கள் எம் அன்னையின் ஆலயத்தையும் பதிவு செய்யப்பட்டுள்ளது வரவேற்க்கத்தக்கது.
25க்கும் மேற்ப்பட்ட முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
இதில் முக்கியமாக நான் பார்த்து மெய்சிலிர்த்த இடம் கம்பத்தடி மண்டபம். இம்மண்டபத்தை இதைவிட அழகாக முற்றிலும் அணு-அணுவாக வேறெங்கும் தரிசிக்க முடியாது.
மீனாட்சி அம்மன் கோவிலில் தினமும் நடக்கும் பூஜையொன்றை முந்தய பதிவில் இட்டேன்!
இன்னும் கொஞ்சம் விளக்கமாக பார்க்கலாம்.
எல்லாகோவிலிலும் முதலில் சுவாமிக்கு தான் தீபஆராதனை மற்றும் எல்லாவித புஜைகள் செய்வர். ஆனால் மதுரையில் முதலில் அம்மனுக்கு தான் பூஜை செய்வது வழக்கம். இதற்க்கு பல வித காரணங்கள் உள்ளன.
1. மீனாட்சி அம்மன் முதலில் மதுரையை ஆண்ட சமயத்தில் எல்லா வித மரியாதைகளும் அவருக்கே முதலில் செய்யப்பட்டதாகவும் காலப்போக்கில் அதுவே வழி வழியாக வந்ததாகவும் சொல்லப்படுகிறது
2. மனைவியானவள் கணவனுக்கு முன்பாக எழுந்து தயாராகி கணவனுக்கு பணிவிடை செய்து எழுப்பவேண்டும் என்ற நியதியை கடைப்பிடிக்க இவ்வாறு செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
இப்பொழுது மீண்டும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்கிறோம்.
இரவு 8:00 மணியளவில் அம்மன் சன்னிதி திரையடப்பட்டு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து வெள்ள மலர்களாலும், மற்றும் வென்நிற பட்டு சாற்றியும் அருட்காட்சி தருவாள் அன்னை அங்கயர்கண்ணி.
மல்லிகை பூவால் கூடாரம் கண்டு, வெண்தாமரைகளால் பாதங்கள் அலங்கரிக்கப்பட்டு, வென்பட்டால் அம்மன் அலங்கரித்து தரும் திருக்காட்சி காண கண்கோடி வேண்டும்.
அவ்வாறு காட்சி தரும் அன்னையை தரிசித்தால் கையில் கிளியேந்திய கலைவாணி இவளே தான் என்றும் சிலர் சத்தியம் செய்து விடுவர், இவரே தான் அந்த வேதமாதாவோ என்றும் தோன்றக்கூடும்!
பிறகு இரவு 9.15 மணியளவில் நடக்கும் பள்ளியறை பூஜையின் போது சுவாமி பல்லக்கில், அம்மன் சன்னிதிக்கு எதிரில் வந்து நிற்பார். அவருக்கு பாதபூஜை நடக்கும். அவரது பாதபூஜையை கண்ணார கண்ட பக்தர்கள் அம்மன் சன்னிதிக்குள் ஓடுவர். முதல் நாள் எனென்று தெரியாமல் நானும் ஓடினேன். அது தான் இரவு கடைசி நேர பூஜை என்றும், பிறகு அடுத்த நாள் தான் அம்மனை தரிசிக்க இயலும் என்பது பிறகு தான் தெரிந்தது.அம்மனுக்கு செய்யும் இந்த தீபாரதனையில் மேலும் ஒரு விசேஷம் என்ன வென்றால் அம்மனுக்கு சூட்டபட்டிருக்கும் மூக்குதியானது எத்தனை தூரமாக நாம் நின்று கண்டாலும், மிகத் தெளிவாக தெரியும். காரணம் உள்ளே இருக்கும் பெரும்பாலான வண்ணம் வெள்ளை, ஆகவே தான் இந்த மூக்குத்தி மிக தெளிவாக தரிசிக்க இயலும். அத்தோடு மூன்று வகையான தீபங்கள் காட்டப்படும் அதில் கடைசி தீபம் அம்மனின் முகத்திற்க்கு மிக அருகில் காட்டுவர் அவ்வாறு காட்டப்படும் போது மிக தெளிவாக அம்மனை தரிசிக்கலாம். பலர் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசிக்க முடியவில்லை என்று சொல்வர், சிரமம் பார்க்காமல் இந்த பூஜைக்கு சென்றால் நிச்சயம் அம்மனை தரிசிக்க இயலும்.
ஒரே நாளில் தானே இச்சா, கிரியா மற்றும் ஞானசக்தியாக அருள்பாலிக்கும் அன்னையை தரிசித்து வருவோம்.
யூட்யுப் கொஞ்சம் அசைபடங்களை தருகிறது. 50க்கும் மேற்பட்ட பள்ளியறை அசைபடங்களை அதில் காணமுடிந்தது, அதில் சற்று துல்லியமான அசைபடங்களை தரிசிக்கவும், நீங்கள் நேரிடையாக சென்று வந்த மனநிலையை தரும் என்று நம்புகிறேன்.
அங்கயர்கண்ணி அன்னை மீனாட்சி நாள் தோறும் பல பூஜைகளையும் பல தரபட்ட அலங்காரங்களும் தந்தருள்கிறாள்.
திருவிழா மற்றும் திருப்பரங்குன்றத்திற்க்கு பயணம் எனும் போது மட்டும் ஒரு சில வகை பூஜைகள் நடக்காமல் இருந்து விடுகிறது. ஆனால் வருடத்தில் 365 நாட்களும் இடைவிடாது நடக்கும் ஒரே பூஜை இந்த பள்ளியறை பூஜை மற்றும் திருப்பள்ளியெழுச்சி பூஜை.
வருடத்தில் 5 தினங்கள் கோவிலின் நடை சாத்தப்பட்டு இருந்தாலும் சுவாமியும், அம்மனும் திரும்பி இந்த பூஜையில் நிச்சயமாக அருள்பாலிப்பர்.
சிவராத்திரி, நவராத்திரி போன்ற நாட்களில் இரவு வெகுநேரம் நடை திறந்திருந்தாலும் அதிகாலை 3-4 மணியளவில் இப்பூஜைகள் நடக்கும்.
அதே போல் தெப்பதிருவிழா மற்றும் திருபரங்குன்றத்து குமரனுக்கு திருக்கல்யாண உற்சவநாளும் முதல் நாள் இரவே இப்பூஜைகளை கண்டு இரவு முழூவதும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பர்.
அத்தகைய பூஜை படங்களை வலையேற்றம் செய்யாமல் இருந்தது ஒரு சிறிய குறையிருந்தது அதை தற்போது தீர்ந்து விட்டது.
முதல் நாள் இரவு சுவாமி தன் சன்னிதியில் இருந்து கிளம்பி வெளியே வருவார்! பிறகு கம்பத்தடி மண்டபத்திற்க்கு முன்னால் இருந்து, சமயக்குறவர்கள் சன்னிதியில் ஓதுவார்கள் தேவார பதிகம் பாடலிசைக்க பயணம் அம்மன் சன்னிதி நோக்கி தொடரும்.
பின் முக்கூருனி விநாயகருக்கு அருகில் தீபஆராதனையும் - அம்மன் சன்னிதி நுழைவாயிலில் பாதபூஜை நடக்கும். சுவாமி பல்லக்கில் இருந்த வாரே அம்மன் சன்னிதிக்குள் செல்வார், பிறகு திருமலை நாயக்கர் சன்னிதிக்கருகில் ஒரு முறை தீபாராதனை காட்டுவர், கடைசியாக பள்ளியறை எதிரில் இருக்கும் வாசல் வழியாக நேரே பள்ளியறைக்குச் செல்வார்.
அவ்வாறு செல்லும் சமயம், ஓதுவார் ஒருவர் "தேவ தேவோத்தமா தேவதா சர்வ தோமா ஆகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகாச் சரிகா! பார்வதிப் பிரிய நாயகாச்சரிகா பாண்டியமண்டாலிதிபாச் சரிகா சோமாநாத பாண்டிய மஹாராஜா பராக்!"
என்று பராக் சொல்ல, பல்லக்கில் இருந்து திருவாச்சி சமேதமாக இருக்கும் சோமசுந்தர கடவுளின் பாதுகை பள்ளியறை நோக்கி செல்லும்!
பின் தீப தூப ஆராதனைகள் ஆரம்பமாகும்
தீபங்களில் 16 வகை உண்டு. தூபம்,மகாதீபம்,அலங்கார தீபம்,நாக தீபம்,விருட்சப தீபம்,புருஷா மிருக தீபம்,ஓலதீபம்,கமடதி தீபம்,கணு தீபம்,வியான்ர தீபம்,சிம்ம தீபம்,துவஜ தீபம்,மயூர தீபம்,ஐந்தட்டு தீபம்,நட்சத்திர தீபம்,மேரு தீபம்
ஆகிய 16 வகை தீபஆராதனைகள் செய்வித்து! அப்பனும் அம்மையும் உளமகிழ்ந்து பொன்னூஞ்சலில் அமர்ந்து அருள்பாலிப்பர்.
“இந்தியாவிலும், மற்ற இடங்களிலும் நடக்கும் மதமாற்ற உத்திகளை காணும்போது, இந்த மதமாற்றம் என்ற கருத்தை, என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அமைதியை நோக்கி செல்லும் உலகத்தின் முன்னேற்றத்திற்கு மாபெரும் தடையாக விளங்கும் ஒரு தவறு அது. ஒரு ஹிந்து கிருத்தவத்திற்கு மதம் மாற வேண்டும் என ஒரு கிருத்தவன் எதற்காக ஆசைப்படுகிறான்? ஒரு ஹிந்து நல்லவனாகவும், கடவுள் பக்தியுள்ளவனாகவும் இருப்பதைக் கண்டு அவனுக்கு ஏன் திருப்தி ஏற்படுவதில்லை?” (ஹரிஜன்: ஜனவரி 30, 1937)
மதுரையம்பதி said... அஷ்ட திக்குகளில் இருக்கும் அரசர்களை வென்று வருவதுதான் திக் விஜயம் என்றே நினைத்திருந்தேன்...மேலும்
குமரன் (Kumaran) said... திக்விஜயம் என்ற சொல்லுக்கே இன்று தான் பொருள் புரிந்தது...மேலும்
Logan said... திரு சிவமுருகன் அவர்களே தங்களின் வலைபூவை தவறாமல் பார்த்து வருகிறேன், மிகவும் நன்று ஆனால் இன்று வந்திருக்கும் படத்தை பார்த்து பிரமித்தேன்...மேலும்
மாதேவி said... புட்டுத் திருவிழா மற்றும் ஏனைய பதிவுகளும், படங்களும் அற்புதம். உங்கள் பதிவிலுள்ள புட்டுக்கு மண்...மேலும்.
ஐயா அவசியம் பதிவிடுங்கள் வந்து மீனாக்ஷி சொக்கேசர் தரிசனம் பெறுகிறோம். ஒரு வேண்டுகோள்...மேலும்
அப்பாதுரை said... ஒரு ஐயம்.மீன் உண்ண விரும்பி மனம் திருந்தி சிவனை வேண்டி பரகதி அடைந்தது சரி. அதற்காக மீனே இல்லாமல் செய்தது...மேலும்.
குமரன் (Kumaran) said... கருங்குருவிக்கு மோக்ஷம் அளித்தது என்று திருவிளையாடல் புராணத்திலும் தினசரியிலும் (காலண்டரிலும்) படித்த நினைவிருக்கிறது. இன்று தான் ...மேலும்.
வல்லிசிம்ஹன் said... சிவா, நான் சிறு வயதில் அம்மன் கோவிலுக்குப் போகும்போது(1950-60)வீதிகள் அவ்வளவு விசாலமாக இருக்கும்.இத்தனை விளக்குகள் இல்லாவிட்டாலும் காற்றூம் வெளிஷச்சமும் பொற்றாமரைகுளமும் அழகாக...மேலும்.
நான் யார் தெரியுமா?
சிவமுருகன் நீலமேகம்
பிறந்தது மதுரை,தமிழ்நாடு, வேலை தேடுவது பெங்களூரு, India
தம்பன்
-
.....உடனே டைட்டில தப்பா இருக்கு அவர் பெயர் தமன்னா என்று சொல்லாதீங்க. தம்பன்
என்பது கம்பராமாயணத்தில் வரும் ஒரு பாத்திரம். யார் என்று சொல்லுங்க
பார்க்கலாம்...
இஷ்டமோ கஷ்டமோவும் ஒரு விருதும்
-
என் கணினியின் ஆமை வேகத்தால் முன்பே சிலர் ’தங்கள் பதிவை மாற்றம்
செய்திருக்கிறோம் ..கொஞ்சம் சரிபார்த்துச் சொல்லவும்’.. என்று டெஸ்ட்
இஞ்சினியர் வேலை பார்க்கச்...
வலைப்பூக்கள் பட்டியல்
-
வணக்கம் நண்பர்களே...
நான் இந்த 2 நாள்களில் அறிமுகப்படுத்திய பதிவுகளுக்கு வரவேற்ப்பு இல்லாததால்,
இன்று வெறும் வலைப்பூக்களின் பட்டியலோடு என் பதிவை முடித்துக்...
Lesson on yoga: Chakra yoga: சக்கர யோகம்!
-
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson on yoga: Chakra yoga: சக்கர யோகம்!
சக்கரம் என்றவுடன் நமது மனக்கண் முன்பாக வந்து நிற்பது வண்டிச் சக்...
Le Chant Des Mariées
-
Le Chant Des Mariées இரண்டாவது உலகப்போரின் போது துனீசியாவில் வாழும் இரு
பதின்ம வயதுப் பெண்கள் இடையே இருக்கும் நட்பு பற்றிய கதை. அதில் ஒருத்தி
முஸ்லீம், ஒரு...
யாரிந்தப் பெண்?
-
வணக்கம். நலந்தானே?
ஒரு மாறுதலுக்காக ஆங்கிலத்தில் படிச்ச ஒரு பாடலைத் தழுவி இந்த பாட்டை
எழுதினேன். "The Gospel of Sri Ramakrishna" புத்தகத்தில் பல அருமையான ப...
அமீரக பதிவர் இன்பச்சுற்றுலா - பதிவர் விவரங்களுடன்
-
நெடுநாட்களுக்குப் பிறகான சிறப்பான ஒரு சுற்றுலாவாக அமைந்தது அமீரகப்
பதிவர்களுடனான கோர்ஃபக்கான் சென்ற நிகழ்வு... மிகக்குறுகிய அவகாசத்தில் எல்லா
ஏற்பாடுகளையும...
இம்மாம் பெருசா!!!
-
தலைநகர் போயிருந்தப்பக்கூட இம்மாம் பெருசா ஒன்னை நான் பார்த்ததே இல்லை. அதுவும்
உசரத்துலே இருந்து கீழே இறங்கும்போதுதான் பிரமாண்டம் தெரிஞ்சது. பதினைஞ்சு
வருசத்...
இம்மாம் பெருசா!!!
-
தலைநகர் போயிருந்தப்பக்கூட இம்மாம் பெருசா ஒன்னை நான் பார்த்ததே இல்லை. அதுவும்
உசரத்துலே இருந்து கீழே இறங்கும்போதுதான் பிரமாண்டம் தெரிஞ்சது. பதினைஞ்சு
வருசத்...
சௌராஷ்ட்ரர் - 3 - சௌரஷ்ட்ர தேசம்
-
சௌராஷ்ட்ர தேசம்
நூறு தேசத்தின் தலைநகராம் இந்த சௌராஷ்ட்ர தேசத்தில் எல்லோரும் ஓர் குலமாய்
வாழ்கின்றனர்!
கண்ணன் புகழ் பாடியும் அவனளித்த தொழிலான நெசவு செய்தும...
ஆடாது, அசங்காது வா...!!
-
*வா*ன முகிலின் மேனியில் வாரிதி பொழிந்தது போலும், பாயும் நதியில் தன் நிறம்
கண்டு கருவங்கொண்ட நீல மேகப் பிம்பத்தில் வெண் நுரை ததும்பியது போலும், கரையில்
கொ...
அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில் உலா!
-
தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக அருள்மிகு மினாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
பற்றி ஒரு இணையதளம் உருவாகி உள்ளது!
இத்தளத்தில் இருக்கும் படங்கள் சாதரணமாக உலக அதிச...
அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில் உலா!
-
தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக அருள்மிகு மினாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
பற்றி ஒரு இணையதளம் உருவாகி உள்ளது!
இத்தளத்தில் இருக்கும் படங்கள் சாதரணமாக உலக அதிச...
தெரிந்து கொள்வோமே!! - கோவில்
-
1. ராஜாதிராஜ விண்ணகரம் என்பது எக்கோவிலைக் குறிக்கும்?
2. செண்பகாரண்யம் எக்கோவிலைச் சுற்றி உள்ளது?
3. தட்சிண துவாரகை என்பது எந்தக் கோவிலைக் குறிக்கும்? (மூன்ற...
காவடிச் சிந்தின் கதை - ஆழ்வார் காவடி! முருகன் காவடி!
-
காவடி என்பது பெரும்பாலும் என் முருகப் பெருமானுக்கே உரியது! கண்ண பெருமானுக்கு
இப்போது யாரும் காவடி எடுப்பதில்லை! மாறாக, கண்ணன் தான் ஆயர் குலப்
பொண்ணுங்களுக்...
என்னது பெரியார் சாமியை நம்பினாரா???
-
ஆமாங்க இன்றைக்கு சென்னைப் பதிவு டெக்கன் க்ரானிகலைப் படிச்சா விவரம்
புரிஞ்சிருக்கும்… அதாவது கோவை சர்வஜனா பள்ளிக்கு 1925ல போன பெரியார் அங்க உள்ள
விருந்தாளிக...
தொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா?
-
நானெல்லாம் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு. நம்மளையெல்லாம் நினைவு
வெச்சிருப்பாங்களான்னு நெனைக்க விடாம நாமக்கல் சிபி இந்தப் பதிவுக்குக்
கூப்டுட்டாரு.
1 . உங்கள...
தொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா?
-
நானெல்லாம் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு. நம்மளையெல்லாம் நினைவு
வெச்சிருப்பாங்களான்னு நெனைக்க விடாம நாமக்கல் சிபி இந்தப் பதிவுக்குக்
கூப்டுட்டாரு.
1 . உங்கள...
உளறினாலும் அழகிய பாட்டு வருமா?
-
ரொம்ப நாள் ஆச்சு இசை இன்பத்துல பதிவு போட்டு.. ( என்னோட ப்ளாக்ல கூட பதிவு
போட்டு ரொம்ப நாள் ஆனது வேற கதை)... ஏர்டல் சூப்பர் சிங்கர் எத்தனை பேரு
பார்கறீங்கனு...
வால்மார்ட் பற்றிய இரு வேறு பார்வைகள்
-
வால் மார்ட் என்பது ஆணி முதல் கப்பல்வரை விற்கும் ஒரு பலசரக்கு கடை. இந்த கடை
அமெரிக்கா/கனடாவில் எல்லா ஊரிலும் மூலை முடுக்கு களிலும் இருக்கும். உலகில்
அதிக ப...
வால்மார்ட் பற்றிய இரு வேறு பார்வைகள்
-
வால் மார்ட் என்பது ஆணி முதல் கப்பல்வரை விற்கும் ஒரு பலசரக்கு கடை. இந்த கடை
அமெரிக்கா/கனடாவில் எல்லா ஊரிலும் மூலை முடுக்கு களிலும் இருக்கும். உலகில்
அதிக ப...
நாதனின் 'பனி மனிதன்' செய்வது எப்படி? :)
-
நாதனின் 'பனி மனிதன்' செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
1. தோட்டம் நிறைய நிறைய பனி(!!!!!!)
2. பாதியாய் வெட்டிய (இரு) கத்தரிக்காய்த் துண்டுகள்
3. ஒரு காரட்
...
53வது தேசிய விருதுகள்
-
ஒரு வழியாக *53வது தேசிய விருதுகள்* அறிவிக்கப் பட்டு விட்டன. தமிழ்ப் படங்கள்
பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்திருக்கின்றன.
சிறந்த குடும்பப் படமாக சேரனின் "தவமாய்த...
குருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு!
-
இதை வைத்துக் கொண்டு குழந்தைக்கும் விளையாட்டு காட்டலாம். காதலியையும் அசர
வைக்கலாம். அதை எல்லாம் அனுபவஸ்தர்கள் அறிவார்கள்!
எப்பிடிப்பா? எப்பிடிப்பா??
அட, சும்...
குருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு!
-
இதை வைத்துக் கொண்டு குழந்தைக்கும் விளையாட்டு காட்டலாம். காதலியையும் அசர
வைக்கலாம். அதை எல்லாம் அனுபவஸ்தர்கள் அறிவார்கள்!
எப்பிடிப்பா? எப்பிடிப்பா??
அட, சும்...